MARC காட்சி

Back
இராமநாதபுரம் சேதுராசன் பேட்டை வணிகர்கள் செப்பேடு
245 : _ _ |a இராமநாதபுரம் சேதுராசன் பேட்டை வணிகர்கள் செப்பேடு -
500 : _ _ |a

          தேவிப்பட்டினத்தை அடுத்த பெருவயல் கிராமத்தில் தளவாய் வயிரவன் சேர்வைக்காரரால் நிர்மாணிக்கப்பட்டது இரணபலி முருகையா திருக்கோயிலாகும். இந்தக் கோயிலின் பூசை முதலியவைகளுக்கு அதே தளவாய் முதலூர், சக்கிரவாளநல்லூர், சதுர்வேதமங்கலம், பாம்பாட்டி, பாஞ்சார் ஆகிய கிராமப் பகுதிகளை சொந்தமாக வாங்கி தானம் வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் பேட்டை வணிகப்பெருமக்களும் இந்தக் கோயில் பயன்பாட்டுக்கு மகமை ஒன்றை ஏற்படுத்தியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

          இராமநாதபுரம் பேட்டைக்கு வரப்பெறுகின்ற பஞ்சு, பாக்கு, மிளகு, பலசரக்கு, செம்பு ஆகியவைகளுக்கு பொதி ஒன்றுக்கு அரைப்பணமும் நெல், நவதானியம், வெற்றிலை, பருத்தி முதலயவைகளுக்கு உரிய மகமையும் வசூலித்து இந்தத் திருக்கோயிலின் அபிஷேக, நெய்வேதன, திருமாலை, திருவிளக்கு, திருவிழா, திருநந்தவனம் ஆகியவைகளுக்கு வழங்குவது என்ற இந்த வணிகர்களது இசைவுமுறியாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி, பெருவயல், பேட்டை வணிகர்கள், மகமை
752 : _ _ |a பெருவயல் |c பெருவயல் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி
906 : _ _ |a கி.பி.1741
914 : _ _ |a 9.45841
915 : _ _ |a 78.8524199
995 : _ _ |a TVA_CPS_00152
barcode : TVA_CPS_00152
book category : சேதுபதி
cover :
Primary File :

88-1.jpg

88-2.jpg

88-3.jpg

88-4.jpg

88-5.jpg

88-6.jpg

88-7.jpg

88-8.jpg

88-9.jpg

88-10.jpg

88-11.jpg

88-12.jpg

88-13.jpg